ADDED : அக் 24, 2026 06:52 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: கஞ்சா விற்ற இரு சிறுவர்கள் உட்பட, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் சாலை, நாணமேடு பகுதியில் கஞ்சா விற்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். அங்கு சந்தேகமான முறையில் நின்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அதில், தவளக்குப்பம் அடுத்த பெரியக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஆதித்தியன்,20; கோதண்டபாணி;20; 17 வயதுடைய 2 சிறுவர்கள் என தெரியவந்தது.
அவர்களிடமிருந்து, 450 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் 4 மொபைல்களை போலீசார் பறிமுதல் செய்து போலீசார் கைது செய்தனர். சிறுவர்கள் அரியாங்குப்பம் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
