UPDATED : அக் 24, 2026 01:02 AM
ADDED : அக் 24, 2026 01:00 AM
புதுச்சேரி: தமிழக அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, கோவிந்தசாலை, கல்வே பங்களா பகுதியை சேர்ந்தவர், கணசேன்,55; தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த, 20 ம் தேதி இரவு 11:00 மணிக்கு வேலையை முடித்து விட்டு, மறைமலையடிகள் சாலையில் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது புதிய பஸ் ஸ்டாண்டு அருகே எதிரே வந்த தமிழக அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசன் சிகிச்சை பலன்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து அவரது மனைவி கீதாஞ்சலி கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போக்குவரத்து போலீசார் பஸ் டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த திருப்பதி என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
