தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தலைக்குனிவு எதிர்கட்சி தலைவர் நாஜிம் ‘காட்டம்’

ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தலைக்குனிவு எதிர்கட்சி தலைவர் நாஜிம் ‘காட்டம்’

ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தலைக்குனிவு எதிர்கட்சி தலைவர் நாஜிம் ‘காட்டம்’


UPDATED : அக் 24, 2026 01:02 AM

ADDED : அக் 24, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 01:02 AM ADDED : அக் 24, 2026 01:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ‘பதவி உயர்வு விவகாரம் தொடர்பாக, அரசு அதிகாரிகளுக்கு, கோர்ட் விதித்த அபாராதம் என்பது ஒட்டு மொத்த மாநிலத்திற்குமே தலைக்குனிவு’ என சட்டசபை எதிர்கட்சித்தலைவர் நாஜிம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கலைக் கல்லுாரிகளில் பணியாற்றி வரும் உதவி பேராசியர்கள், பதவி உயர்வு கேட்டு போராடி வருகின்றனர். இது தொடர்பாக, நானும், சட்டசபையில் பேசினேன். ஆனால், இதுவரை அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. கோர்ட்டுக்கு

சென்ற நிலையில், அவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க தீர்ப்பு வந்துள்ளது.

அது மட்டுமின்றி, உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்க தவறிய தலைமைச் செயலர், செயலர், துறை இயக்குனர்களுக்கு, 2 லட்ச ரூபாய் அபாராம் விதித்து, அதனை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் கட்ட வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளதாக அறிகிறேன். இந்த அபராதம் என்பது ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டும் என கருத முடியாது. ஒட்டுமொத்த மாநிலத்திற்குமே தலைக்குனிவு என்பதை உணர வேண்டும்.

புதுச்சேரி மாநில அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு 4 மாதம் சம்பளம் மற்றும் பென்ஷன் கிடைக்கவில்லை. இது தொடர்பாக, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், இயக்குனரிடம் சந்தித்த பேசியும் எந்த பலனுமில்லை. இப்படிபட்ட அலட்சிய போக்கை அரசு பின்பற்றவது என்பது நல்ல முன்னுதாரனம் அல்ல. நானும், கைலாசவிற்கு சென்று நித்தியானந்தாவை சந்திக்க வேண்டுமா? உடனடியாக, அவர்களுக்கான சம்பளம் மற்றும் பென்ஷன் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மகளிர் உதவி தொகை, முதியோர், மாற்றுத்திறனாளிகள், மீனவர்களுக்கான உதவி உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. பி.எப்.எம்.எஸ்., என்ற தலைப்பில் உள்ள வங்கி கணக்கில் செலுத்தினால், அந்த பணம் உரிய நேரத்தில் மக்களிடம் கிடைக்கும் என துறை செயலரிடம் பேசி உள்ளேன். இந்த தொகை, தீபாவளிக்கு முன்னதாக மக்களிடம் கிடைத்திட செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us