ADDED : பிப் 19, 2025 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், புதுச்சேரி சுகாதார இயக்குனரக வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா விழிப்புணர்வு ஆட்டோ வாகன பிரசாரம் துவங்கியது. துறை இயக்குனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தேசிய சுகாதார இயக்க இயக்குனர் கோவிந்தராஜன் முன்னிலை வகித்தார். துணை இயக்குனர் அனந்தலட்சுமி, உதவி இயக்குனர் வசந்தகுமாரி உள்ளிட்ட திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
ஏற்பாடுகளை துணை இயக்குனர் ரகுநாதன் செய்திருந்தனர்.