ADDED : ஜன 29, 2026 05:33 AM

புதுச்சேரி: அகில இந்திய அளவிலான கராத்தே, டேக்வாண்டோ மற்றும் மல்யுத்தம் போட்டி, புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ் திருமண மஹாலில் நடந்தது.
போட்டிக்கு, மாநில கராத்தே சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மோகன், அமிர்தராஜ், பிரவீன் குமார், அய்யனார், விநாயகம், சந்திரகுமார் முன்னிலை வகித்தனர்.
மனோ, சபஸ்தியன், ராகுல் கிருஷ்ணகுமார், ராஜ்மோகன், அன்புமணி, மோகனச்சந்துரு, சஞ்சய் ராஜ், முகேஷ் லிங்கம் நடுவர்களாக செயல்பட்டனர். சிறுவர், சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆ ண்கள் என 7 வயது முதல் 40 வயது வரையில் 86 பிரிவுகளின் கீழ் போட்டிகளில் நாடு முழுதும் 2000 மேற்பட்ட வீரர் கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், தனிப்பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டத்தை புதுச்சேரியை சேர்ந்த சஞ்சய் ராஜ் பெற்றார். அவருக்கு பட்டத்துடன் ரூ .50 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
அணிகள் பிரிவில் அகில இந்திய அளவில் 39 புள்ளிகள் பெற்ற திண்டிவனம் சாணக்யா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன் ஷிப் பட்டத்தை பெ ற்றனர்.
புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்கத் தலைவர் முத்து கேசவலு, என்.ஆர். விளையாட்டு வீரர்களின் நல சங்க சேர்மன் ராஜா, தலைவர் ஆளவந்தான், பாக்ஸிங் சங்க செயலாளர் கோபு, தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க செயலாளர் தங்கவேலு, காரைக்கால் மாவட்ட டேக்வாண்டோ சங்கத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

