/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 09, 2025 06:37 AM
புதுச்சேரி : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்பின்கோ அனைத்து தொழிற்சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒருகிணைப்பாளர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க நிர்வாகிகள் எல்லப்பன், மஞ்சினி, முருகன், ராமலிங்கம், தேசிங்கு, ரமேஷ், ராஜாராம், நடராஜன், ரஞ்சித், ரவிச்சந்திரன், பழனிராஜா, இளங்கோ, துரைலிங்கம், ஞானபிரகாசம், சுதாகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை ஐகோர்ட் தீர்ப்பின்படி, தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 ஆண்டுகால நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். 58 வயது முடிவடைந்தவர்களுக்கு பென்ஷன் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.