/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அலியான்ஸ் பிரான்சே புதிய நிர்வாக குழு தேர்வு
/
அலியான்ஸ் பிரான்சே புதிய நிர்வாக குழு தேர்வு
ADDED : நவ 28, 2025 04:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சே புதிய நிர்வாக குழு தலைவராக பேராசிரியர் வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சே சத்தீஷ் நல்லாம் தலைமையிலான நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிந்தது.
அதனையொட்டி, புதிய நிர்வாகக்குழுவிற்கான தேர்தல் நடந்தது.
அதில் புதிய நிர்வாகக்குழு தலைவராக பேராசிரியர் வெங்கட்ராமன் தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் துணை தலைவராகவும், ஷர்மீளா அஷாரிப் செயலராகவும், ஜெயப்பிரகாஷ் பொருளாளராகவும், நித்யா துணை செயலராகவும், கண்ணா, விசாலாட்சி, அலிபேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார்.
நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்ற பேராசிரியர் வெங்கட்ராமன் கூறுகையில், '13 6 ஆண்டுகள் பழமையான புதுச்சேரி அலியான்ஸ் பிரான்சே நிர்வாக குழு தலைவராக பதவி ஏற்பதில் பெருமிதம் கொள்கிறேன். இந்திய கலாசாரத்திற்கும், பிரெஞ்சு கலாசாரத்திற்கும் ஒரு வலுவான பாலமாக தொடர்ந்து இந்த கழகம் செயல்படும். மேலும், பிரெஞ்சு மொழியை முறையாக கற்கும் ஒரு கேந்திரமாக விளங்கும்' என்றார்.

