தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு தர நிர்ணய கூட்டமைப்பு சிறப்பு அங்கீகாரம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு தர நிர்ணய கூட்டமைப்பு சிறப்பு அங்கீகாரம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு தர நிர்ணய கூட்டமைப்பு சிறப்பு அங்கீகாரம்


ADDED : செப் 16, 2026 07:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 07:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனுாரில் அமைந்துள்ள அலைடு  ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு இந்திய நிறுவன தரநிர்ணய கூட்டமைப்பின் மூலம் சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவன தரநிர்ணய கூட்டமைப்பு என்பது இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் செயல் திறனை மதிப்பீடு செய்து அவற்றின் தரம், செயல்பாடு மற்றும் வளர்ச்சியை ஆய்வு செய்யும் ஒரு அமைப்பாகும்.

இந்நிறுவனமானது கல்வி நிறுவனங்களின் உள் கட்டமைப்பு மற்றும் தரவரிசையை மட்டும் கருத்தில் கொள்ளாமல் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வை, நிறுவன கல்வி அமைப்பு, ஆராய்ச்சி  செயல்பாடுகள் மற்றும் தனித்துவமான நிறுவன அடையாளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அங்கீகரித்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் விநாயகா மிஷின் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் வளாகம், புதுச்சேரி மற்றும் சென்னை பையனுாரில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிகளுக்கு தனித்துவமான சிறப்பு பெற்ற நிறுவனத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒட்டுமொத்த இந்திய தரவரிசையில் 157வது இடமும், மாநில அளவில் 19வது இடமும், வளர்ந்து வரும் சிறப்புத்திறன் கொண்ட நிறுவன பிரிவு மற்றும் நிறுவனத்தின் முதிர்ச்சி நிலை பிரிவில் 4ம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதுகுறித்து கல்லுாரியின் டீன் செந்தில்குமார் கூறுகையில், ‘இந்திய நிறுவன தர நிர்ணய கூட்டமைப்பின் மூலம் கிடைக்கப் பெற்றுள்ள இத்தகைய சிறப்பு அங்கீகாரமானது எங்களின் தொடர்ச்சியான கல்வி மற்றும் நிறுவன மேம்பாட்டு முயற்சிகளுக்கும், பன்முகத் தன்மை, புதுமை மற்றும் செயலாக்கம், மாணவர்களுக்கு தொழில்துறை சார்ந்த திறன்களை வழங்குதல், வேலை வாய்ப்பிற்கு வழி வகுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு சிறந்த பங்களிப்பினையாற்றிய கல்லுாரியின் டீனுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன், துணைத் தலைவர் அனுதாரா கணேசன், கல்லுாரியின் பேராசிரியர்கள் வாழ்த்தினை தெரிவித்தனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us