sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சுயேட்சை வேட்பாளர்களுக்கு 176 சின்னங்கள் ஒதுக்கீடு! வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது

/

சுயேட்சை வேட்பாளர்களுக்கு 176 சின்னங்கள் ஒதுக்கீடு! வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது

சுயேட்சை வேட்பாளர்களுக்கு 176 சின்னங்கள் ஒதுக்கீடு! வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது

சுயேட்சை வேட்பாளர்களுக்கு 176 சின்னங்கள் ஒதுக்கீடு! வேட்பாளர் பட்டியல் இன்று இறுதியாகிறது


ADDED : மார் 30, 2024 07:02 AM

Google News

ADDED : மார் 30, 2024 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதும், இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதற்காக 176 சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை, 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.வேட்பு மனு பரீசிலனையில் முறையாக கையெழுத்திடாத, தகவல்களை குறிப்பிடாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இறுதியாக, பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தன் உள்பட 27 பேர் சமர்பித்த 36 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. போட்டியிட விருப்பம் இல்லாவிட்டால் இன்று 30ம் தேதி மாலை 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.

சின்னம் ஒதுக்கீடு


இறுதி வேட்பாளர் பட்டியலில் ரெடியானதும் மாலை 4 மணிக்கு சின்னம் ஒதுக்கீடு பணி துவக்கப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில், அங்கீகரிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முதலில் அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.

அடுத்து அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி துவங்கும். இந்திய தேர்தல் ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்றிருந்து, அதற்கான கடிதத்தை எழுத்து பூர்வமாக சமர்பித்தால் அவர்கள் கேட்கும் சின்னம் ஒதுக்கப்படும். இல்லையெனில் தேர்தல் துறை ஒதுக்கியுள்ள சுயேட்சைக்கான சின்னங்களில் இருந்து ஒரு சின்னத்தை தேர்வு செய்ய வேண்டி இருக்கும்.

சுயேட்சைகளின் தேர்வு செய்வதற்கு வசதி யாக தேர்தல் துறை 176 சின்னங்களை ஒதுக்கீடு செய்து, வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் கலெக்டர் அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் சுயேட்சைகள் விரும்பும் மூன்று சின்னங்கள் வரிசைப்படுத்தி வாங்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலின்படி சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.ஒரு சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட சுயேட்சைகள் கேட்டிருந்தால் நடைமுறைகள் நீளும். கடந்த தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாகி இருந்தால் அவருக்கு அதே சுயேட்சை சின்னம் முன்னுரிமை கொடுத்து ஒதுக்கப்படும்.

இல்லையெனில், குலுக்கலில் சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். இதேபோல், இரண்டாவது, மூன்றாவதாக சின்னம் கேட்ட வேட்பாளர்கள் வரிசைப்படுத்தப்பட்டு ஒரே சின்னத்தை பலரும் கேட்டிருந்தால் குலுக்கலில் ஒதுக்கப்படும்.

சின்னம் ஒதுக்கீடு பணி இறுதி செய்யப்பட்டதும், போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

அதை தொடர்ந்து, ஓட்டு சீட்டுகள், தபால் ஓட்டுகள், சர்வீஸ் ஓட்டுகள், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுதிறனாளிகளுக்கான ஒட்டு பதிவுக்கான ஓட்டு சீட்டுகள் அச்சடிக்கும் பணிகள் துவங்க உள்ளன.






      Dinamalar
      Follow us