/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆல்பா ஆங்கில பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்
/
ஆல்பா ஆங்கில பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்
ADDED : ஏப் 27, 2025 04:35 AM

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை ஆல்பா ஆங்கிலப் பள்ளியின் ஆண்டு விழா, காலாப்பட்டு கணேஷ் மகாலில் நடந்தது.
ஆல்பா கல்வி குழுமத்தின் சேர்மன் பாஷிங்கம் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் தனலட்சுமி பாஷிங்கம் வரவேற் றார். சிறப்பு விருந்தினராக ஆல்பா பொறியியல் கல்லுாரி மற்றும் கலை அறிவி யல் கல்லுாரி இயக்குனர் தனத்தியாகு கலந்து கொண்டு நோக்கவுரையாற்றினார்.
தலைமை விருந்தினராக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை ஆல்பா ஆர்த்தோ கிளினிக் இயக்குனர் நவீன் தியாகு, பள்ளியின் இயக்குனர் நந்தினி சீனிவாசன் தலைமையில் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.