ஆல்பா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாகஸ் போட்டியில் சாதனை
ஆல்பா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அபாகஸ் போட்டியில் சாதனை
UPDATED : நவ 28, 2026 07:11 PM
ADDED : நவ 28, 2026 07:08 PM

புதுச்சேரி: ஆல்பா மெட்ரிக் பள்ளி மாணவர்கள், அபாகஸ் போட்டியில் தேசிய அளவில் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி, ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 8 ம் வகுப்பு மாணவர்கள் நிரஞ்சன், மனோஜ், 5ம் வகுப்பு மாணவி சக்தி ஸ்ரீ, மாணவர் முகமது பாஷித் ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக அபாகஸ் வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்தனர்.
தற்போது நடந்த அபாகஸ் போட்டியில் இந்த மாணவர்கள் முறையே 9, 4, 3 மற்றும் 1 என்ற நிலைகளில் தேசிய அளவில் வெற்றி பெற்று பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றனர்.
தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை ஆல்பா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் தனதியாகு, பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி பாராட்டினார். இதில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் உடனிருந்தனர்.
