தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு


UPDATED : நவ 28, 2026 06:36 PM

ADDED : நவ 28, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2026 06:36 PM ADDED : நவ 28, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 2981ன் மண்டலம்–4ன் கீழ் மெயின் ரோட்டரி சங்கம், ஈவ்ஸ் ரோட்டரி சங்கம், கிராண்ட் ரோட்டரி சங்கம், அகரம் ரோட்டரி சங்கம், நெபுலா ரோட்டரி சங்கம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, புதுச்சேரி நகராட்சி ஆகியவை இணைந்து ‘பெண்களுக்கு சட்ட விழிப்புணர்வு மூலம் அதிகாரமளித்தல்' தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடத்தின.

நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலர் ரமேஷ், சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல்பாடுகள், மக்கள் நீதிமன்றம், ‘டோல் பிரீ ’எண்கள் குறித்து விளக்கினார். புதுச்சேரி நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு சிறப்புரையாற்றினார். ரோட்டரி மாவட்ட உதவி கவர்னர் சவுரிராஜன் வரவேற்றார்.

மிஷன் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கரி மத்திய, மாநில அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், நலத்திட்டங்கள் குறித்தும், நமஸ்தே திட்ட மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சூர்யா, சுய உதவி குழு உறுப்பினர்களுக்கும், துாய்மை பணியாளர்களுக்கும் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் பேசினர்.

ரோட்டரி மாவட்டத் தலைவர் மரி அன்னா தயாவதி, பெண்களுக்கான உரிமைகள் குறித்தும், வசதி இல்லாதவர்களுக்கான இலவச சட்ட உதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

மெயின் ரோட்டரி சங்கத் தலைவர் சரவணன், ஈவ்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் கிளாடின் குணசேகர், கிராண்ட் ரோட்டரி சங்கத் தலைவர் ராயன் ஆல்பர்ட் பொமினிக், அகரம் ரோட்டரி சங்கத் தலைவர் பூவிழி, நெபுலா ரோட்டரி சங்கத் தலைவர் லோகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ரோட்டரி மாவட்டம்–2981ன் மண்டலச் செயலர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us