தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம்

புதுச்சேரியில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம்

புதுச்சேரியில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம்


ADDED : நவ 28, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு நாட்கள் வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் நடக்கிறது.

மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் 01.01.2027-ஐ தகுதி நாளாக கொண்டு சுருக்குமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மற்றும் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த 12ம் தேதி துவங்கி வரும் 04.01.2027ம் தேதி வரை நடக்கிறது.

பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் நலன் கருதி, இன்று 28ம் தேதி மற்றும் நாளை 29ம் தேதி இரண்டு நாட்கள் அந்தந்த ஓட்டுச் சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கு சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள்.

தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி, புகைப்பட மாற்றம் மற்றும் இதர விவரங்களில் உள்ள பிழைகளை திருத்த விண்ணப்பிக்கலாம். இறந்தவர்கள் அல்லது இரட்டை பதிவுகள் போன்ற பொருத்தமான காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பொது மக்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி, பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us