/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளி தொகுதியில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
/
மணவெளி தொகுதியில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
மணவெளி தொகுதியில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
மணவெளி தொகுதியில் மாற்று கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : ஆக 25, 2025 05:49 AM

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.,வில் இணைந்தனர்.
இணைப்பு விழா, அரியாகுப்பம். மணவெளி, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தொகுதி கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மணவெளி தொகுதி தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், மாநில அமைப்பாளர் சிவா முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். தொகுதி செயலாளர் ராஜாராமன் வரவேற்றார் .
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.,மூர்த்தி பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், அமுதா குமார், நர்கீஸ், மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், மாநில விளையாட்டு அணி அமைப்பாளர் ரவி, கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.