ADDED : பிப் 21, 2024 09:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்,: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1979--80ம் ஆண்டு மாணவர்கள் சந்திப்பு கூட்டம், கடலுார், தேவனாம்பட்டினத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு,முன்னாள் சங்கத் தலைவர் தெய்வநாயகம் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் குமார், குப்புசாமி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் மாணவரும் சமூக சேவகருமான நெட்டப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் சமூக சேவையை பாராட்டி, அவரது நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, முன்னாள்மாணவ மாணவியர்களின் பட்டிமன்றம், கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

