ADDED : செப் 23, 2024 06:30 AM

புதுச்சேரி : புதுச்சேரி காரமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சந்திப்பு கூட்டம், வரும் டிச., 29ம் தேதி நடத்துவற்கான குழு அமைக்கப்பட்டது.
அதன்படி, தலைவராக நாரா கலைநாதன், பொருளாளராக சதாசிவம், உறுப்பினர்களாக எல்லை சிவகுமார், கலியமுருகன், பாஸ்கரன், பரமகுரு, டேவிட், ரங்கநாதன், மூர்த்தி, ஆரோக்கியராஜ், சொர்ணராஜ், செயலாளராக ஜெகஜோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சார்பில், நடத்தப்பட உள்ள மருத்துவ முகாமின் அழைப்பிதழை, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன் வழங்கினார்.
கூட்டத்தில், சங்க உறுப்பினர்கள் பள்ளி நினைவு மலர் தயாரிப்பது, முன்னாள் மாணவர் சந்திப்புக்காக வாட்ஸ் குழு துவக்கி, 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களைச் சேர்ப்பது, வழிகாட்டி ஆசிரியர்களைக் கவுரவிப்பது, நமது பங்களிப்புகளின் செலவுகளை நிர்வகிப்பதற்கு யு.பி.ஐ., கணக்கை உருவாக்கி, அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் வெளிப்படையாக நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.