ADDED : செப் 18, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: காமராஜர் அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பட்டமளிப்பு விழா நடந்தது.
உலக சுற்றுலா தினத்தையொட்டி, கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள காமராஜர் அரசு கலைக்கல்லுாரியில், சுற்றுலாத்துறை சார்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் கதிர்வேல் தலைமை தாங்கினார். பேராசிரியர் கார்த்திக் வரவேற்றார். சுற்றுலாத்துறை தலைவர் தங்கப்பன் நோக்கவுரை ஆற்றினார். கல்லுாரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை, கல்லுாரியில் பயிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் பெருமாள் நன்றி கூறினார்.
