ADDED : செப் 18, 2026 07:31 PM
புதுச்சேரி: ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டு மேடை சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
சுதேசி மில் அருகில் நடந்த போராட்டத்திற்கு கூட்டுமேடை தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணன், கலியமூர்த்தி, ஞானசேகர், ராமசாமி, கணேசன், பக்தவச்சலம் முன்னிலை வகித்தனர். சண்முகசுந்தரம், கோவிந்தன், விஸ்வநாதன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலிறுத்தி பேசினர்.
போராட்டத்தில், கொடுங்கோன்மை வேலிடேஷன் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை என அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பணிக் கொடை உள்ளிட்ட பலன்களுடன் அமல்படுத்த வேண்டும்.
எட்டாவது ஊதியக் குழுவின் வரம்பு குறிப்பை மாற்றியமைக்க வேண்டும். இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். 50 சதவீத அகவிலைப்படியை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செய்திதொடர்பாளர் நமச்சிவாயம் நன்றி கூறினார்.
