/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் பள்ளியில் மாணிக்க பெருவிழா நிறைவு
/
அமலோற்பவம் பள்ளியில் மாணிக்க பெருவிழா நிறைவு
ADDED : அக் 11, 2024 05:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி தனது 40 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாணிக்கப் பெருவிழாவை கடந்த 5ம் தேதி துவங்கி நேற்று நிறைவு விழா நடந்தது.
பள்ளி நிறுவனர் லூர்துசாமி வரவேற்றார். பள்ளியின் 40 ஆண்டுகால வரலாற்று ஆண்டறிக்கையை பள்ளி முதுநிலை துணை முதல்வர் ஜலஜா பாலகிருஷ்ணன் வாசித்தார். பள்ளி முதல்வர் ஆண்டோனியஸ் தொகுத்து வழங்கினார். விழாவிற்கு தலைமை விருந்தினராக தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையம் மற்றும் மத்திய அமைச்சக தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், வைத்திலிங்கம் எம்.பி., செல்வகணபதி எம்.பி., எதிர்க்கட்சித் தலைவர் சிவா, சம்பத் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி கொண்டாட்ட பெயர் பலகையை மத்திய அமைச்சக தலைவர் வெங்கடேசன் திறந்து வைத்து, பள்ளியின் வரலாற்றை விளக்கும் குறுந்தகடை வெளியிட சபாநாயகர் செல்வம் பெற்றுக் கொண்டார்.
விழாவில், அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமலோற்பவம் லுார்து அகாதமியில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவிலும் பள்ளி அளவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு தங்க மோதிரம் நூறு மதிப்பெண் பெற்ற 70 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி காசுகாள் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகள் கொடுத்த மாணவர்களுக்கு வெள்ளி காசுகள் வழங்கப்பட்டது.
பள்ளி துணை தாளாளர் சூசை மரியநாதன் நன்றி கூறினார்.

