/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கலா உத்சவ் போட்டிகளில் அமலோற்பவம் பள்ளிக்கு 2 பதக்கம்
/
தேசிய கலா உத்சவ் போட்டிகளில் அமலோற்பவம் பள்ளிக்கு 2 பதக்கம்
தேசிய கலா உத்சவ் போட்டிகளில் அமலோற்பவம் பள்ளிக்கு 2 பதக்கம்
தேசிய கலா உத்சவ் போட்டிகளில் அமலோற்பவம் பள்ளிக்கு 2 பதக்கம்
ADDED : ஜன 29, 2024 04:39 AM

புதுச்சேரி, : தேசிய கலா உத்சவ் போட்டிகளில் அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
மத்திய பள்ளி கல்வி அமைச்சகம் மற்றும் எழுத்தறிவு இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்கள் இடையே கல்வி,கலைதிறன் சார்ந்த படைப்பாற்றலை கண்டறிந்து வெளிக் கொணர ஆண்டுதோறும் தேசிய கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில், அன்மையில் டில்லி தேசிய பால்பவன் காந்தி சமிதியில் தேசிய கலா உத்சவ் போட்டியின் இறுதி சுற்று போட்டி நடந்தது.
இதில் 28 மாநிலங்கள்,8 யூனியன் பிரதேசங்களில் இருந்து 38 அணிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் கிேஷார்குமார் உள்நாட்டு பாரம்பரிய பொம்மை உருவாக்கம் மற்றும் விளையாட்டு ஆடவர் பிரிவிலும்,மற்றொரு மாணவர் பிலிப்பான்வினோ எவாரிஸ் நாட்டுப்புற குரலிசை பிரிவிலும் நடந்த போட்டியில் தனித்தனியாக வெண்கலம் வென்று அசத்தினர்.
இறுதி சுற்றில் வென்ற மாணவர்களுக்கு மாநில வெளியுறவு கல்வி அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பரிசு வழங்கினார்.
தேசிய அளவில் வெண்கலம் வென்ற அமலோற்பவம் பள்ளி மாணவர்கள்,ஏற்கனவே புதுச்சேரி பள்ளி கல்வித் துறை சமகர சிக் ஷாவின் வழிகாட்டுதலின்படி ஜவகர் பால்பவன் நடத்திய போட்டியில் மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பதக்கம் வென்ற மாணவர்கள் கிேஷார்குமார்,பிலிப் பான்வினோ எவாரிஸ் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களை பள்ளி நிறுவனர் லுார்துசாமி பாராட்டினார்.
மேலும் 6 கிராம் வெள்ளிகாசு பரிசு வழங்கினார்.