/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமலோற்பவம் மாணவர்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி
/
அமலோற்பவம் மாணவர்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி
அமலோற்பவம் மாணவர்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி
அமலோற்பவம் மாணவர்கள் வினாடி வினா போட்டியில் வெற்றி
ADDED : ஆக 10, 2025 08:48 AM

புதுச்சேரி : பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், பள்ளிக்கல்வி துறை இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு வினாடி வினா போட்டியை நடத்தின.
புதுச்சேரியில் நடந்த போட்டியை, திட்ட இயக்குனர் அருள்விசாகன், பள்ளிக் கல்வி துறை முதன்மை கல்வி அலுவலர் குலசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சங்க இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் நடந்த மாவட்ட அளவிலான போட்டியில் வென்ற மாணவர்கள், 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, மாநில போட்டியில் பங்கேற்றனர். அமலோற்பவம் லுார்து அகாடெமி குழு மாணவர்கள் ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
இவர்களுக்கு ரூ.10,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வென்ற மாணவர்களுக்கு சுகாதார துறை இயக்குனர் செவ்வேள் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
மாகி அன்னை தெரசா மேல்நிலை பள்ளி மாணவர்கள் அபிஜித் ஜிஜோ, அய்லீன் பெர்னாண்டஸ் ஆகியோர் 2வது இடம், காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ்., நேஷனல் மேல்நிலை பள்ளி மாணவி ஸ்ருத்திகா, காரைக்கால் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவி நந்திதா தர்ஷிணி ஆகியோர் 3வது இடம் பிடித்தனர்.
கல்வித்துறை, எய்ட்ஸ் கட்டுப்பாட்ட சங்க அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முதலிடத்தை பிடித்த அமலோற்பவம் லுார்து அகாடெமி மாணவர்கள் ஸ்ரீராம், சதீஷ்குமார் ஆகியோர், வரும் செப்டம்பரில் தென்னிந்திய மண்டல அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். உதவி இயக்குனர் அபினேஷ் நன்றி கூறினார்.

