/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒலிம்பியா போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை
/
ஒலிம்பியா போட்டியில் அமலோற்பவம் பள்ளி சாதனை
ADDED : ஜன 20, 2025 06:19 AM

புதுச்சேரி: இந்திய வானிலை ஆய்வு மையம் நடத்திய தேசிய அளவிலான ஒலிம்பியா போட்டியில் அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி தேசிய அளவில மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தது.
தெற்காசிய வானிலை சங்கம் (SAMA) மற்றும் இந்திய வானிலை சங்கம்,இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன்இணைந்து தேசிய அளவிலான வானிலை ஆய்வு மைய ஒலிம்பியாட் போட்டியை டில்லி பாரத் அரங்கில் நடத்தியது.
ஒலிம்பியாட் போட்டியில் மாநில அளவில் அமலோற்பவம் லுார்து அகாடமி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கிருஷ்கா, ஸ்ரீராம், கோவர்தன்,ஆஷிக் அஜ்மல், அப்துல் வஹிது, சுஹைல், பிரியன், சித்தார்த், சரவணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இம்மாணவர்கள் டில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டனர். மாணவர்களை ஐ.எம்.டி., விஞ்ஞானிகள் இம்ரான் அன்சாரி, ஆனந்த குமார் தாஸ் ஆகியோர் பாரட்டி வழி அனுப்பி வைத்தனர்.
தேசிய அளவில் நடந்த இறுதிபோட்டியில் அமலோற்பவம் லுார்து அகாடமி சி.பி.எஸ்.இ.,பள்ளி 8ம் வகுப்பு மாணவி கிருஷ்கா மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தார்.
பரிசளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களுகு்குபரிசு, சான்றிதழ் நினைவு பரிசு வழங்கினார்.
மாணவி கிருஷ்காவுக்கு பள்ளியின் நிறுவனர் மற்றும் முதுநிலை முதல்வர் லுார்துசாமி 4 கிராம் தங்க நாணயம் வழங்கி கவுரவித்தார்.