தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மீண்டும் ஓரம்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்: கரிக்கலாம்பாக்கம் மக்கள் அவதி

மீண்டும் ஓரம்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்: கரிக்கலாம்பாக்கம் மக்கள் அவதி

மீண்டும் ஓரம்கட்டப்பட்ட ஆம்புலன்ஸ்: கரிக்கலாம்பாக்கம் மக்கள் அவதி


UPDATED : நவ 06, 2026 07:08 PM

ADDED : நவ 05, 2026 04:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:08 PM ADDED : நவ 05, 2026 04:55 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையத்தில் மீண்டும் ஆம்புலன்ஸ் பழுதாகி ஓரம்கட்டப்பட்டது அப்பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி பொது மருத்துவமனைக்கு அடுத்து, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நல வழி மையம் முக்கியமானதாக உள்ளது. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த மருத்துவமனையில், கரிக்கலாம்பாக்கம், கோர்க்காடு, உருவையாறு, ஏம்பலம், மற்றும் சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்கிருந்து மேல்சிகிச்சை மற்றும் அவசரகால தேவைகளுக்கு புதுச்சேரிக்கு நோயாளிகளை விரைவாக அழைத்து செல்ல ரோட்டரி சங்கம் சார்பில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கப்பட்டது. இதுதவிர, தேசிய சுகாதார இயக்கம் சார்பில், 108 ஆம்புலன்ஸ் ஒன்றும் உள்ளது. ரோட்டரி சங்கம் வழங்கிய ஆம்புலன்ஸின் டயர் பழுதாகி இயங்காமல் இருந்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து ஆம்புலன்சிற்கு புதிய டயர் பொருத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த இருபது நாட்களாக இன்ஜின் பழுது காரணமாக ஓரம் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் உயிர்காக்கும் விஷயத்தில், மீண்டும், மீண்டும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது அப்பகுதி பொது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் இயக்காமல் இழுத்தடித்தால், அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us