குஜராத் அணிவகுப்பில் பங்கேற்ற பைக் குழுவிற்கு டி.ஜி.பி. பாராட்டு
குஜராத் அணிவகுப்பில் பங்கேற்ற பைக் குழுவிற்கு டி.ஜி.பி. பாராட்டு
UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 04:55 PM

புதுச்சேரி: போதைப் பொருட்களுக்கு எதிராக குஜராத் பயணித்து தேசிய ஒருமைப்பாடு அணிவகுப்பில் பங்கேற்ற புதுச்சேரி போலீஸ் பைக் குழுவினருக்கு டி.ஜி.பி. ஷாலினி சிங் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி காவல்துறை சார்பில் போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்கவும், தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தவும் ‘போதைப்பொருட்களுக்கு எதிராக தேசத்திற்காகப் பயணம்’ என்ற பைக் விழிப்புணர்வு பேரணி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே நடந்த பேரணியை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் 5 ஆண்கள், 2 பெண்கள் உட்பட மொத்தம் 16 உறுப்பினர்கள் கொண்ட குழுயினர், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, தாமன் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியாக 2,150 கிலோ மீட்டர் பயணித்து கடந்த 28ம் தேதி குஜராத், ஏக்தா நகரை அடைந்தனர். அங்கு கடந்த 31ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் நடந்த தேசிய ஒருமைப்பாடு அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இதையடுத்து, விழிப்புணர்வு பயணத்தை முடித்துக் கொண்டு புதுச்சேரி திரும்பிய குழுவினருக்கான பாராட்டு விழா நேற்று நடந்தது.கோரிமேட்டில் நடந்த விழாவில், டி.ஜி.பி. ஷாலினி சிங், தேசிய ஒருமைப்பாடு அணிவகுப்பில் பங்கேற்ற குழுவினருக்கு பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கினார். இதில், டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் அனிதா ராய், கலைவாணன், திவ்யா, நித்யா ராதாகிருஷ்ணன், லட்சுமி சவுஜன்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
