ஏனாம் புயல் பாதிப்பிற்கு ரூ.150 கோடி: வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
ஏனாம் புயல் பாதிப்பிற்கு ரூ.150 கோடி: வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை
UPDATED : நவ 06, 2026 07:08 PM
ADDED : நவ 05, 2026 05:18 PM

புதுச்சேரி: ஏனாம் புயல் பாதிப்பிற்கு ரூ.150 அரசு ஒதுக்கவேண்டும் என காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து காங்., தலைமை அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சமூக பொருப்புணர்வு திட்டத்தின் மூலம் ரூ.70 லட்சம் மதிப்பில் ஐ.சி.யு., வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவிற்கு 57 படுக்ககைள் வாங்கி உள்ளோம்.
எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்பில் புதிதாக 5 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன. போலி மருந்து சம்பந்தமாக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி மருந்து மற்றும் காலாவதியான மருந்து தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். பல்மருத்துவ கல்லுாரி பணம் ரூ8.5 கோடி கொள்ளைபோயுள்ளது. திட்டமிட்டு கொலைகள் நடக்கின்றன. போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ., போராட்டம் நடத்துகிறார். முதல்வர் தொகுதியிலேயே சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. ஏனாம் புயல் பாதிப்பை முதல்வர் நேரடியாக சென்று பார்க்கவில்லை. ஏனாம் புயல் பாதிப்பிற்கு அரசு ரூ.150 கோடி ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் நேரடியாக நிவாரணம் கிடைக்க, அவரவர் வங்கி கணக்கில் நிவாரணத்தை வரவு வைக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆதிதிராவிடர்கள் அனைவருக்கும் தீபாவளி பணம் வழங்கப்படும். இந்த ஆண்டு சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு மட்டும் பணம் வந்துள்ளது. இது அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
