/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை
/
சாமுண்டீஸ்வரி கோவிலில் அம்மன் பண்டிகை
ADDED : ஜூன் 07, 2025 10:29 PM

புதுச்சேரி : உருளையன்பேட்டை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் அலகு, கத்தி அபிேஷகம் நடந்தது.
உருளையன்பேட்டையில் சித்தி விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 4ம் ஆண்டு அம்மன் பண்டிகை கடந்த 4ம் தேதி துவங்கியது.
5ம் தேதி விக்னேஸ்வர பூஜை, அனுக்ஜை துவஜாரோகணம், லட்சுமி கணபதி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை, சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சம்வஸ்த்திர கலசாபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
6ம் தேதி காலை அம்மன் பண்டிகை, சக்தி வழிபாடு, கரக வீதியுலா, மதியம் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு அலகு, கத்தி அபிேஷகம், 1:00 மணிக்கு அலகு நிறுத்துதல், தீபாராதனை, அன்னதானம் நடந்தது.
மாலை ஜோதி வழிபாடு, இரவு சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் ஜோதி வீதியுலா நடந்தது.
இதில், திரளான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு உற்சவம் நடந்தது.