/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பண்டிகை விழா
/
சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பண்டிகை விழா
ADDED : நவ 20, 2025 05:53 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சவுடாம்பிகை கோவிலில் அம்மன் பண்டிகை விழா இன்று துவங்குகிறது.
முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள ஆதிவிநாயக வீரபத்திர சவுடாம்பிகை அம்மன் கோவிலில் அம்மன் பண்டிகை பெருவிழா இன்று 20ம் தேதி துவங்கி, 22ம் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி, இன்று காலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, மாலை 4:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
நாளை காலை 8:00 மணிக்கு சக்தி கலசத்துடன் நகர்வலம் வருதல், 12:00 மணிக்கு ஏழை மாரியம்மன் கோவிலில் இருந்து சவுடாம்பிகை அம்மனுக்கு அலகு பானையில் கங்கை நீர் கொண்டு வருதல், 12:30 மணிக்கு அம்மனுக்கு அலகு அபிேஷகம், தொடர்ந்து அலகு நிறுத்துதல், 2:00 மணிக்கு மகா ஜோதி மாவு இடித்தல், இரவு 7:30 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.
நாளை மறுநாள் 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், மஞ்சள் நீராட்டு விழா, தொடர்ந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

