/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலை மேம்பாட்டு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
சாலை மேம்பாட்டு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
சாலை மேம்பாட்டு பணி : எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : நவ 20, 2025 05:53 AM

பாகூர்: பாகூர் தொகுதியில் 19 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, சாலை மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக, பாகூர் தொகுதி, இருளன்சந்தை கிருஷ்ணா நகர், லட்சுமி நரசிம்ம நகர் பகுதியில் 10 லட்சத்து 47 ஆயிரத்து 498 ரூபாய் செலவில், குடிநீர் வசதியுடன் தார் சாலை, பாகூர் ஆசிரியர் நகர் உள் வீதியில் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயில் சாலை அமைத்தல், பாகூர் தென்பெண்ணையாற்றில் 5 லட்சத்து 89 ஆயிரம் செலவில், இடுகாடு கொட்டகை மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, பணிகளை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், இளநிலை பொறியாளர் புனிதவதி உட்பட பலர் உடனிருந்தனர்.

