/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
/
மகாராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
ADDED : அக் 02, 2025 01:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நடந்து வரும் சத சண்டி ஹோமத்தில் அம்மன் நேற்று மகாராணி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், இ.சி.ஆர்., சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்து வரும் சத சண்டி ஹோமத்தில் 10வது நாளான நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதில், அம்மன் மகாராணி அலங்காரத்தில் அஸ்வ வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். தொடர்ந்து, 128 விளக்கு பூஜை நடந்தது.