/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
/
மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது
ADDED : பிப் 17, 2025 01:50 AM

பாகூர்: மனநலம் பாதித்த பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் மனநலம் பாதிக்கப்பட்ட 38 வயது பெண், கடந்த மாதம் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசாருக்கு மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக, கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு் பதிந்து, விசாரணை நடத்தினர். அதில், கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தேவராஜ், 65, என்ற முதியவர் அப்பெண்ணை கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, அப்பெண் விறகு பொறுக்க வந்ததாகவும், அவரை பலாத்காரம் செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கிருமாம்பாக்கம் போலீசார் தேவராஜை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலப்பட்டு சிறையில் அடைத்தனர்.