/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் விஞ்ஞான ஊழல் அ.தி.மு.க., அன்பழகன் குற்றச்சாட்டு

ADDED : நவ 16, 2024 02:16 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி நிதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரி, குமரகுரு பள்ளத்தில், 400 சதுர அடியில் 216 பயனாளிகளுக்கு, ரூ.45.50 கோடியில் பொதுப்பணித்துறை சார்பில், ஸ்மார்ட் சிட்டி நிதியில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படுகின்றன.
இதைக்கட்ட புதிய டெக்னாலஜி அடிப்படையில் டெண்டர் விடப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் அழைப்புகளில், இறுதி செய்யப்படாமல், 3ம் அழைப்பில் அரசின் புதிய டெக்னாலஜி அடிப்படையில், சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு டெண்டருக்கு மேல், 7 சதவீதம் அதிகப்படுத்தி 'சிங்கிள் டெண்டர்' அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது விஞ்ஞான ரீதியிலான ஊழல். அதிகார வர்க்கத்தில் உள்ள சில அதிகாரிகள் கூட்டு சதி செய்து ஊழல் செய்துள்ளனர்.
இந்த அடுக்குமாடி வீடு கட்ட ஒரு சதுர அடிக்கு, ரூ.4 ஆயிரம் செலவாகி உள்ளது. இந்த மதிப்பில், 7 நட்சத்திர ஓட்டலே கட்டி விடலாம். இந்த முறைகேடு சம்பந்தமாக முதல்வர், கவர்னர் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.