/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமூக நீதிக்கு எதிரான செயலை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் பழி சுமத்துகின்றனர் தி.மு.க., - காங்., மீது அன்பழகன் தாக்கு

ADDED : செப் 22, 2024 01:47 AM
புதுச்சேரி: தி.மு.க., - காங்., தங்களின் சமூக நீதிக்கு எதிரான செயலை மூடி மறைக்க தற்போதைய முதல்வர் மீது வீண் பழியை சுமத்துகின்றன என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
அவர், கூறியதாவது:
புதுச்சேரி மின்கட்டண உயர்வு சம்பந்தமாக பந்த் போராட்டம் அறிவித்த தலைவர்களை கைது செய்ய காவல்துறை தலைவருக்கு கடிதம் அளித்தோம். அவர்களை போலீசார் கைது செய்யவில்லை.
அ.தி.மு.க., மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சி என தி.மு.க., அமைப்பாளர் கூறியுள்ளார். தி.மு.க., அமைப்பாளர் 4 முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற வாய்ப்பளித்த உருளையன்பேட்டை தொகுதியை புறக்கணித்து, வேறு தொகுதிக்கு சென்றவர். அவர் அ.தி.மு.க., பற்றி பேச உரிமையும் இல்லை.
தி.மு.க., துணை அமைப் பாளர் 10 சதவீத இடஒதுக்கீடு பிரச்னையில் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் போது இந்தியாவில் எதிர்த்த ஒரே முதல்வர் பழனிசாமி.
புதுச்சேரியில் இந்த சட்டத்தை அப்போது தி.மு.க., காங்., கூட்டணி முதல்வராக இருந்த நாராயணசாமி அமல்படுத்தினார். இதை தி.மு.க.,வினர் மூடி மறைத்துவிட்டு அதிகாரிகள் அமல்படுத்தியதாக வசைபாடி வருகின்றனர்.
தி.மு.க.,வின் திசை திருப்பும் இந்த நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். தி.மு.க., காங்., தங்களின் சமூக நீதிக்கு எதிரான செயலை மூடி மறைக்க தற்போதைய முதல்வர் மீது வீண் பழியை சுமத்துகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.