sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தீபாவளி தொகுப்பிற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; அன்பழகன் வலியுறுத்தல்

/

தீபாவளி தொகுப்பிற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; அன்பழகன் வலியுறுத்தல்

தீபாவளி தொகுப்பிற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; அன்பழகன் வலியுறுத்தல்

தீபாவளி தொகுப்பிற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; அன்பழகன் வலியுறுத்தல்


ADDED : அக் 31, 2024 05:45 AM

Google News

ADDED : அக் 31, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தீபாவளிக்கு அறிவித்த இலவச அரிசி மற்றும் மானிய தொகுப்பிற்கான தொகை ரூ.1,100 பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;

முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கார்டிற்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.500 மானியத்துடன் 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என்றார். இவ்விரண்டையும், மக்கள் ஆங்காங்கே தேடி அலைந்து கொண்டுள்ளனர்.

எனவே அரசு போலி கவுரவம் பார்க்காமல் 10 கிலோ இலவச அரிசிக்கு ரூ.500-ம், 2 கிலோ சர்க்கரைக்கு ரூ.100-ம், 10 உணவு பொருட்களுக்கு மானியம் ரூ.500 என மொத்தம் ரூ.1,100-ஐ அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.

முதல்வரின் அறிவிப்பு தீபாவளி பண்டிகைக்கானது. அந்த தீபாவளியே முடிந்த பிறகு அதற்குரிய பணத்தை வழங்குவதே நியாயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் நாகமணி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, நகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us