/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து மக்களை ஏமாற்றும் செயல் நாராயணசாமி மீது அன்பழகன் குற்றச்சாட்டு

ADDED : மே 22, 2025 03:30 AM
புதுச்சேரி: அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 சதவீத மருத்துவ இடங்களை தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து பெற கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அ.தி.மு.க., அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநில செயலாளர் அன்பழகன் கூறியதாவது;
புதுச்சேரியில் போலியாக தயாரிக்கப்பட்டு தமிழக டாஸ்மாக் கடையில் விற்கப்பட்ட மதுபானங்கள் குறித்த வழக்கு மீது அமலாக்கத்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும். புதுச்சேரியில் 7 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 3கல்லுாரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்கி வருகிறது. ஆனால், 4 கல்லுாரிகள் மருத்துவ இடங்களை வழங்குவது இல்லை. அரசுக்கு கொடுக்க வேண்டிய 50 சதவீத மருத்துவ இடங்களை தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து பெற கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அந்தஸ்து சம்பந்தமாக சுயேச்சை எம்.எல்.ஏ., முயற்சி எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மத்திய பா.ஜ., அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என, தெளிவாக கூறியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என, சுயேச்சை எம்.எல்.ஏ., கொடுத்த விண்ணப்பத்திற்கு கையெழுத்து போட்டுள்ளனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிஅதிகாரத்தில் இருந்தபோது மாநில அந்தஸ்து பெற்று தராதவர்கள், தற்போது மாநில அந்தஸ்திற்காக கையெழுத்து போடுவது மக்களை ஏமாற்றும் செயலாகும். மாநில அந்தஸ்து பெறுவது அ.தி.மு.க.,வின் கொள்கையாகும்' என்றார்.