/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்களை ஏமாற்றும் தி.மு.க., அன்பழகன் கண்டனம்
/
மக்களை ஏமாற்றும் தி.மு.க., அன்பழகன் கண்டனம்
ADDED : ஜன 09, 2025 06:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி, அண்ணா சிலை அருகில், தி.மு.க.,வை கண்டித்து அ.தி.மு.க சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி, பேசியதாவது:
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் சம்பவத்தில்சம்மந்தப்பட்டவர், தி.மு.க உறுப்பினர் என்பதற்காக, இன்று வரை முதல்வர் ஸ்டாலின்மவுனம் காப்பதுஒட்டு மொத்த தமிழகத்தையும் அவமதிக்கும் செயல்.
புதுச்சேரியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி சபாநாயகர் மீது, 3 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள்நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கடிதம் கொடுத்துள்ளனர். அது சம்பந்தமாக, பா.ஜ., எம்.எல்.ஏ., ஜான்குமாரிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு, அவர், 'சட்டசபையில் எங்கள் சபாநாயகருக்கு எந்த பாதிப்பும் இல்லை. தி.மு.க., வும் எங்களை ஆதரிக்கிறது'என,எதிர்க் கட்சித்தலைர் சிவாவின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி பா.ஜ., அரசை காப்பாற்றஅக்கட்சி எம்.எல்.ஏ., எங்களுக்கு தி.மு.க.,துணை நிற்கிறது என, பகீரங்கமாக பேட்டி அளிக்கும் விதத்தில், அந்த இரு கட்சிகளின் உறவு உள்ளது.ஆனால் இதை எல்லாம் மூடி மறைத்து விட்டு, பா.ஜ.,விற்கு ஆதரவாக அ.தி.மு.க உள்ளதாக, மக்களை ஏமாற்றும் விதத்தில் தி.மு.க., பேசுவது கண்டிக்கத்தக்கது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில்தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் தி.மு.க., விற்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டி, பழனிச்சாமி தலைமையில், அ.தி.மு.க., ஆட்சியை மக்கள் கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

