/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அன்பழகன் வலியுறுத்தல்
/
மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அன்பழகன் வலியுறுத்தல்
மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அன்பழகன் வலியுறுத்தல்
மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : நவ 05, 2024 06:47 AM
புதுச்சேரி: பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்காத தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டம் என தேசிய மருத்துவக் கவுன்சில் கடந்த 2021ல் அறிவித்தது. அதை பின்பற்றி புதுச்சேரி அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரியான இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி இளநிலை பயிற்சி மாணவர்களுக்கு மாதம் ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது. ஆனால், தனியார் மருத்துவக் கல்லுாரிகளான வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி ரூ.5,000, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி ரூ.10 ஆயிரம் வழங்குகிறது. நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் நாளொன்றுக்கு ரூ.85 வீதம் மாதத்திற்கு ரூ.2,500 மட்டுமே வழங்குகிறது.இப்பிரச்னையின் உண்மை நிலையை உணர்ந்து, அரசின் உத்தரவை செயல்படுத்தாக தனியார் மருத்துவக் கல்லுாரி நிர்வாகங்கள் மீது முதல்வர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, மாநில தலைவர் அன்பானந்தம், அண்ணா தொழிற்சங்க பாப்புசாமி மற்றும் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் உடனிருந்தனர்.