/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழை நிவாரணம் ரூ.6,000 அன்பழகன் வலியுறுத்தல்
/
மழை நிவாரணம் ரூ.6,000 அன்பழகன் வலியுறுத்தல்
ADDED : டிச 01, 2024 04:20 AM

புதுச்சேரி : புயல் மற்றும் மழை நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.6,000 வழங்க வேண்டும் என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்,
புயல், மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புயல் எதிரொலியால் பெய்து வரும் தொடர் மழையால் மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். எனவே, மழை நிவாரணமாக குடும்பத்திற்கு ரூ.6,000 வழங்க வேண்டும்.
கனமழையை எதிர்கொள்ள வசதியாக, அனைத்து தனியார் பள்ளிகளையம் அவசர கால பாதுகாப்பிற்காக திறந்து வைக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும். தொற்று நோய் பரவலை தடுக்க தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மழை பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்திட வேண்டும். மழையால் பாதித்த மக்களுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உதவி செய்திட வேண்டும் என்றார்.
பேட்டியின்போது மீனவரணி செயலாளர் ஞானவேல், துணைத் தலைவர்கள் வளர்முனியன், சந்திரசேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

