/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்
/
ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்
ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்
ஆண்டாள் திருக்கல்யாணம் : அரவிந்த லோசனன் உபன்யாசம்
ADDED : ஜன 02, 2026 04:55 AM

புதுச்சேரி: சாரதாம்பாள் கோவிலில் நடைபெற்று வந்த உபன்யாசம் நேற் றுடன் நிறைவு பெற்றது.
புதுச்சேரி, எல்லைப் பிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவிலில் மார்கழி மாத மகோத்சவத்தையொட்டி, கடந்த 26ம் தேதி முதல் தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமியின், ஸ்ரீமத் பாகவத புராண உபன்யாசம் நடைபெற்று வந்தது.
இறுதிநாளான நேற்றைய உபன்யாசத்தில், சாத்வீக தேவதா நிர்ணயம்,மகாபாரத யுத்தத்தை நடத்தியது, உத்தவருக்கு செய்த உபதேசம், கண்ணன் வைகுண்டத்துக்கு புறப்பட்டு சென்றது, பரீட்சித்து முக்தி அடைந்தது மற்றும் மார்க்கண்டேய சரித்திரங்களைவிளக்கி கூறினார். தொடர்ந்து ஆண்டாள் திருக்கல்யாணத்துடன், சுவாமியின் உபன்யாசம் நிறைவு பெற்றது.