/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்
ADDED : ஜன 18, 2024 04:08 AM

புதுச்சேரி: லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நடந்த ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மகோற்சவம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஆண்டாள் அருளிய திருப்பாவை குறித்து, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம், மார்கழி மாதம் முழுவதும் தினமும் உபன்யாசம் நிகழ்த்தினார்.
தொடர்ந்து, மாட்டு பொங்கலன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்க பெண்களுக்கு திருமாங்கல்ய சரடு, ஜாக்கெட் துணி மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
ஆண்களுக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.