/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர் கிரிக்கெட் போட்டி; பைனலில் ஆந்திரா, கர்நாடகா அணிகள்
/
சிறுவர் கிரிக்கெட் போட்டி; பைனலில் ஆந்திரா, கர்நாடகா அணிகள்
சிறுவர் கிரிக்கெட் போட்டி; பைனலில் ஆந்திரா, கர்நாடகா அணிகள்
சிறுவர் கிரிக்கெட் போட்டி; பைனலில் ஆந்திரா, கர்நாடகா அணிகள்
ADDED : பிப் 17, 2025 06:09 AM

புதுச்சேரி; 14 வயது சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டியில் கர்நாடகா, ஆந்திரா அணிகள் இன்று மோத உள்ளன.
ஏழு தென் மண்டல மாநில கிரிக்கெட் சங்கங்கள் இணைந்து, 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான 2 நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் புதுச்சேரி துத்திப்பட்டு சீகெம் மைதானங்கள், லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை சீகெம் மைதானம் 2ல், புதுச்சேரி, ஆந்திரா அணிகள் மோதின. முதலில் விளையாடிய புதுச்சேரி அணி 166 ரன்களில் ஆட்டம் இழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆந்திரா அணி 3 விக்கெட் இழந்து 300 ரன்கள் எடுத்து ஆந்திரா முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது.
சீகெம் மைதானம் 3ல், கேரளா, ஹைதரபாத் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழந்து 370 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 9 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்தது . ஹைதராபாத் அணி முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது.
லட்சுமி நாராயணா மருத்துவ கல்லுாரி மைதானத்தில் தமிழ்நாடு, கோவா அணிகள் மோதின. முதலில் விளையாடிய கோவா அணி 111 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 5 விக்கெட் இழந்து 290 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது . பின் விளையாடிய கோவா அணி 105 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10 விக்கெட் எடுத்த தமிழ்நாடு அணியின் அனிருத் ஆட்டநாயகன் விருதை வென்றார். லீக் போட்டிகள் முடிவுற்ற நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆந்திரா அணியும், கர்நாடகா அணியும் இன்று சீகெம் மைதானம் 2ல் நடக்கும் இறுதி போட்டியில் மோத உள்ளன.

