/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆந்திர வாலிபருக்கு கத்தி குத்து; மர்ம நபர்கள் இருவருக்கு வலை
/
ஆந்திர வாலிபருக்கு கத்தி குத்து; மர்ம நபர்கள் இருவருக்கு வலை
ஆந்திர வாலிபருக்கு கத்தி குத்து; மர்ம நபர்கள் இருவருக்கு வலை
ஆந்திர வாலிபருக்கு கத்தி குத்து; மர்ம நபர்கள் இருவருக்கு வலை
ADDED : பிப் 14, 2024 03:31 AM
புதுச்சேரி : மதுபானம் தராத கோபத்தில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த ஆந்திர மாநில வாலிபரின் கழுத்தை கத்தியால் கிழித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திரா மாநிலம், ரேணிகுண்டா ரயில் நிலையம், பல்லா நகரைச் சேர்ந்தவர் சிவாரெட்டி, 29; இவரது தாய் தந்தை சிறுவயதில் இறந்து விட்டனர். கட்டட வேலை செய்து பிழைத்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேலை தேடி புதுச்சேரி வந்தார்.
வேலை சரிவர கிடைக்காததால், புஸ்சி வீதி, பாரதி வீதி சந்திப்பில் சாலையோரம் ரேணுகா என்பவர் நடத்தும் தள்ளுவண்டி பழம் கடையில் வேலை செய்து சாலையோரம் துாங்கி வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:20 மணிக்கு, தள்ளுவண்டி கடை அருகே சாலையோர பிளாட்பாரத்தில் படுத்து துாங்கி கொண்டிருந்தார்.
அங்கு வந்த இருவர் சிவா ரெட்டியை எழுப்பி, மதுபானம் இருக்கிறதா என கேட்டனர். இல்லை என கூறியவுடன், இருவரும் தன் கையில் வைத்திருந்த கத்தியால், சிவா ரெட்டி கழுத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
சிவா ரெட்டி புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து செய்து, கழுத்தில் கத்தியால் கிழத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

