/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காளன் எம்.எல்.ஏ., மீண்டும் டி.ஜி.பி.,யிடம் புகார்
/
அங்காளன் எம்.எல்.ஏ., மீண்டும் டி.ஜி.பி.,யிடம் புகார்
அங்காளன் எம்.எல்.ஏ., மீண்டும் டி.ஜி.பி.,யிடம் புகார்
அங்காளன் எம்.எல்.ஏ., மீண்டும் டி.ஜி.பி.,யிடம் புகார்
ADDED : டிச 05, 2024 06:39 AM
புதுச்சேரி: அங்காளன் எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசி மிரட்டல் விடுத்த அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி.,யிடம் மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி திருபுவனை (தனி) தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன். இவரை கடந்த 26ம் தேதி அரசு ஊழியர் உளவாய்க்கால் சந்திரசேகரன் மொபைல்போனில் தொடர்பு கொண்டார்.
கடந்த தேர்தலில் நாங்கள் ஆதரவு கொடுத்ததால், நீ எம்.எல்.ஏ., வாக தேர்வானாய் என, ஒருமையில் பேசினார்.
மேலும் கடந்த 17ம் தேதி காமராஜர் தொகுதியில் நடந்த பரிசளிப்பு விழாவில், லாட்டரி அதிபர் மகன் காலில் விழுந்து குறித்தும், ஜாதி குறித்தும் அவதுாறாக பேசி மிரட்டல் விடுத்தார்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அங்காளன், ஜான்குமார், சிவசங்கரன் ஆகியோர் டி.ஐ.ஜி., கலெக்டர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தனர்.
உளவாய்க்கால் சந்திரசேகரன் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், அங்காளன் எம்.எல்.ஏ.,விற்கு மிரட்டல் விடுத்த உளவாய்க்கால் சந்திரசேகர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி., அலுவலகத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., வாட்ஸ்ஆப் ஆடியோவுடன் நேற்று மீண்டும் புகார் அளித்தார்.