/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
/
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 25, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் அடுத்த மணப்பட்டு அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி விக்னேஷ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வாக, நேற்று யாக சாலை பூஜைகள், காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. கோவில் கோபுரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பால விநாயகர், அங்காள பரமேஸ்வரி தாண்டவமூர்த்தி, பாலமுருகர், பாவாடைராயர், ராகு, கேது, புத்து அம்மன், மயான காளி, சமயபுரத்து அம்மன், பெரியாயி அம்மன், பெரியாண்டவர், கலியுலக வரதராஜ பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.