ADDED : செப் 29, 2026 08:12 PM
புதுச்சேரி: பா.ஜ., சார்பில் பிரதமர் பிறந்த நாளையொட்டி ராஜ்பவன் தொகுதியில் அங்கன்வாடி திருவிழா நடந்தது.
பிரதமர் மோடியின் 76வது பிறந்த நாள் மற்றும் அவரின் 25 ஆண்டுகால பொது சேவையை சிறப்பிக்கும் வகையில், ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட செங்கேனியம்மன் கோவில் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி திருவிழா நடந்தது. பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தொடர்ந்து அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் பயனாளிகள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் அங்கன்வாடியில் வந்த சிறார்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பிந்து சுரேஷ், மாநில மகளிரணி தலைவி தாமரைசெல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் மகேஷ்ரெட்டி, மகளிரணி நிர்வாகிகள், ராஜ்பவன் தொகுதி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
