/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நாளை துவக்கம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நாளை துவக்கம்
அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நாளை துவக்கம்
அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நாளை துவக்கம்
ADDED : ஜன 09, 2026 08:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில், 7 வது மாநில மாநாடு நாளை துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது.
இது குறித்து சங்க செயலாளர் தமிழரசி கூறியதாவது:
நாடு முழுதும் 11 லட்சம் அங்கன்வாடி மையங்களில் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் 7வது மாநில மாநாடு நாளை (10ம் தேதி) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. மாநாட்டின் துவக்கமாக அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை பேரணி சுப்பையா சிலை அருகில் இருந்து புறப்பட்டு, நவீனா கார்டன் திருமண நிலையத்தை அடைந்து, மாநாடு நடக்கிறது.
மாநாட்டை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார். இரண்டாம் நாள் மாநாட்டினை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தொழிற்சங்க தலைவர் சுதா துவக்கி வைக்கிறார்.
மாநாட்டில், 7வது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு, போனஸ் நிலுவைத் தொகை மற்றும் பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்' என்றார்.

