/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாசு கட்டுப்பாடு குழும அதிகாரியுடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்திப்பு
/
மாசு கட்டுப்பாடு குழும அதிகாரியுடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்திப்பு
மாசு கட்டுப்பாடு குழும அதிகாரியுடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்திப்பு
மாசு கட்டுப்பாடு குழும அதிகாரியுடன் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சந்திப்பு
ADDED : ஜூன் 25, 2025 07:57 AM

புதுச்சேரி : திபுராயப்பேட்டையில் இலவச மனைப்பட்டா வழங்க தடையில்லா சான்றிதழ் வழங்கும்படி, மாசு கட்டுப்பாடு குழும அதிகாரியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
உப்பளம் தொகுதி, திபுராயப்பேட்டை நிகோலஸ் குடியிருப்பில் நீண்டகாலமாக வசித்து வரும் குடும்பங்களுக்கு மனைப்பட்டா வழங்க அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, திப்புராயப்பேட்டை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குலோத்துங்கன், நில அளவைத்துறை இயக்குநர் செந்தில்குமார் ஆகியோரிடம் 'நிகோலஸ் குடியிருப்பில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருபவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதுடன், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் மாசு கட்டுப்பாடு குழும செயலர் டாக்டர் யாசம் லட்சுமி நாராயணனை சந்தித்து, நிகோலஸ் குடியிருப்பு பகுதியில் மனைப்பட்டா வழங்க நில அளவை துறைக்கு, தடையில்லா சான்றிதழ் அளிக்கும் கோப்புக்கு ஒப்புதல் வழங்கும்படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., கேட்டு கொண்டார்.
இதையடுத்து, தடையில்லா சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதில், தி.மு.க., செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ், மோரிஸ், வின்சன்ட் அருண், அருள் ஆகியோர் உடனிருந்தனர்.