/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அரசாணை வெளியிட வேண்டும் அனிபால் கென்னடி வலியுறுத்தல்

ADDED : ஜூன் 02, 2025 10:51 PM
புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டு அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும் என தி.மு.க., துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
அரசு பள்ளிகளில் முதல்முறையாக சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பிளஸ் 2வில் தேர்ச்சி அதிகம் இருந்தாலும், மதிப்பெண் குறைவாக உள்ளது. அதனையொட்டி, வரும் 2025- 26ம் கல்வி ஆண்டு முதல் 'நீட்' அல்லாத தொழில்முறை படிப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என கடந்தமாதம் முதல்வர் அறிவித்தார்.
இதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்திருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்தாண்டு மருத்துவபடிப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டில் 37 இடங்களில் 20க்கும் குறைவான மாணவர்களே சேர்ந்தனர். இந்த நிபந்தனையை தளர்த்தி தமிழகத்தை போன்று 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மேலும், இந்த அறிவிப்பிற்கான அரசாணையை விரைவில் வெளியிட வேண்டும் . இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டில் 1,500 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதால், அவர்களுக்கு எந்தெந்த பிரிவில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று விவரத்தை வெளியிட வேண்டும். மேலும், இந்த மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முதல்வர் விரைந்து அறிவிக்க வேண்டும்.