/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவிலில் ஆஞ்சநேயர் ஹோமம்
/
சாரதாம்பாள் கோவிலில் ஆஞ்சநேயர் ஹோமம்
ADDED : அக் 06, 2024 04:34 AM

புதுச்சேரி: புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில், 50ம் ஆண்டு சாரதா நவராத்திரியை முன்னிட்டு ஆஞ்சநேயர் ஹோமம் நேற்று நடந்தது.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 50ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் 3ம் தேதி துவங்கியது.
அதையொட்டி, மூன்றாம் நாளான நேற்று (5ம் தேதி) காலை 8:00 மணி முதல் 10:30 வரை தன்வந்தரி ஹோமம், 10:30 மணி முதல் 12:30 வரை ஆஞ்சநேயர் ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு ஸத்குரு தியாகராஜர் குழுவினரின் பாட்டு, சாரதா கலாமந்திர் இசை நாட்டியப்பள்ளியின் பரதம் நிகழ்ச்சி நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (6ம் தேதி) காலை 8:00 மணி முதல் 10:30 வரை துார்க்கா சூக்த ஹோமம், 10:30 மணி முதல் 12:30 வரை காயத்திரி ஹோமம் நடக்கிறது. வரும் 11ம் தேதி மகாசண்டி ஹோமம், 12ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.