/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி20 கிரிக்கெட் போட்டி அன்னை ராணி சோழன் கிரிக்கெட் அணிகள் வெற்றி
/
டி20 கிரிக்கெட் போட்டி அன்னை ராணி சோழன் கிரிக்கெட் அணிகள் வெற்றி
டி20 கிரிக்கெட் போட்டி அன்னை ராணி சோழன் கிரிக்கெட் அணிகள் வெற்றி
டி20 கிரிக்கெட் போட்டி அன்னை ராணி சோழன் கிரிக்கெட் அணிகள் வெற்றி
ADDED : ஜன 29, 2024 04:29 AM

புதுச்சேரி : புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அகாடமி மற்றும் அசோசியேசன் சார்பில் 15 வது டி20 கிரிக்கெட் போட்டி லாஸ்பேட்டை மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் இந்த வாரம் நடந்த 27 வது போட்டியில் அன்னை ராணி கிரிக்கெட் அணி, கிளாசிக் கிரிக்கெட் அணிகள் மோதியது. முதலில் களம் இறங்கிய கிளாசிக் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் பிரவீன்குமார் 87 ரன்களும், பார்த்தி 28 ரன்களும், ராஜ்குமார் 28 ரன்களும் எடுத்தனர். பின் களம் இறங்கிய அன்னை ராணி கிரிக்கெட் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மோகன் 52 ரன்களும், சிவா 49 ரன்களும், கண்ணன் 32 ரன்களும் எடுத்தனர்.
ராஜமாணிக்கம் மூன்று விக்கெட்களை எடுத்தார். அன்னை ராணி கிரிக்கெட் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அறை இறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது.
28 ஆவது போட்டியில் சாய் கிரிக்கெட் அணியும், சோழன் கிரிக்கெட் அணியும் மோதியது. முதலில் களமிறங்கிய சாய் கிரிக்கெட் அணி 14 ஓவர்களில் 10 விக்கெட்கள் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெங்கடேஷ் 15 ரன்கள் எடுத்தார். சோமசுந்தர் 4 விக்கெட்களும், யோகராஜன் 4 விக்கெட்களும் எடுத்தனர்.
பின் களம் இறங்கிய சோழன் கிரிக்கெட் அணி 9 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சிரஞ்சீவி 15 ரன்கள் எடுத்தார். மணி 4 விக்கெட்களும், தியாகு 3 விக்கெட்களும் எடுத்தனர். சோழன் கிரிக்கெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அறை இறுதி லீக் போட்டிக்கு தகுதி பெற்றது. ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன்
சந்திரசேகரன், நிர்வாகிகள் ஜில்பர்ட், பார்த்திபன் கணேஷ் அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.