சித்தானந்த சுவாமி கோவிலில் 25ம் தேதி அன்னாபி ேஷகம்
சித்தானந்த சுவாமி கோவிலில் 25ம் தேதி அன்னாபி ேஷகம்
UPDATED : அக் 21, 2026 07:28 PM
ADDED : அக் 21, 2026 07:26 PM
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு 25ம் தேதி அன்னாபி ேஷகம் நடக்கிறது.
கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, வரும் 25ம் தேதி இரவு 7:30 மணிக்கு அன்னாபிேஷக சிறப்பு தீபாராதனை நடக்கிறது. அதனையொட்டி கோவிலில் 25 கிலோ அரிசியில் தயார் செய்யப்பட்ட அன்னம், 100 கிலோ காய்கறிகள், 50 கிலோ பழங்கள், 10 கிலோ இனிப்பு வகைள் கொண்டு மூலவர் குருசித்தானந்த சுவாமிக்கு அன்னாபிேஷக அலங்காரம் நடக்கிறது.
மாலை 3:00 மணிக்கு துவங்கும் இந்த அன்னாபி ேஷக அலங்காரம் இரவு 7:30 மணிக்கு நிறைவு பெற்று, சுவாமிக்கு திரை விலக்கப்பட உள்ளது. அன்னாபி ேஷக அலங்காரத்தில் சித்தானந்த சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
இரவு 7:30 மணிக்கு மகா தீபாராதனை செய்து, அன்னம் கலைக்கப்பட்டு, அதன் ஒரு பகுதி கோவில் குளத்தில் கரைக்கப்படுகிறது. மற்றொரு பகுதி புளியோதரை, சர்க்கரைபொங்கல், தயிர், சாம்பார், எலும்பிச்சை, இனிப்புடன் பிரசாதங்களுடன் சேர்க்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
அன்னாபிஷேகத்திற்கு அரிசி, காய்கறிகள், பழ வகைகள் மற்றும் இனிப்பு வகைகள் கொடுக்கும் பக்தர்கள் 25ம் தேதி காலை 10:00 மணிக்குள் தேவஸ்தானத்தில் கொண்டு வந்து தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன், தேவசேனாதிபதி குருக்கள் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
